கௌரவ அமைச்சர் அவர்களின் செய்தி

நிலத்தின் உரிமையற்ற சகல இலங்கையாளர்களுக்கும், காணியின் உரித்தினை வழங்கி, பயிரிடப்படாத சகல காணிகளையும் வினைத்திறன்மிக்க பொருளாதார நடைமுறைக்கு பங்கினை வழங்கும் வகையில், சுழலின் சமத்துவத்தினை பாதுகாக்கும், காணி தொடர்பான செயற்பணிக்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சினை வழிநடாத்துவது எனது குறிக்கோளாகும்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் குறிக்கோளுக்கமைய சென்று நாட்டிற்குரிய பிரதான இயற்கை வளமாக விளங்கும் நிலத்தினை உயர்ந்த அளவில் முகாமை செய்து எதிர்கால சந்ததியினர்களுக்கு பாதுகாப்பது நாம் அனைவரினதும் கடமையாகும்.

நாட்டின் சகல அபிவிருத்தி நடவடிக்கைளிலும் முன்னுரிமை காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சுக்கு கிடைக்கிறது. அமைச்சின் பயன்பாடு, குறித்த நிலத்தினை சிறந்த முறையில், நாட்டின் அபிவிருத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கும் பங்களிப்பு செயவதன் மூலம் மிக அர்த்தமுடையதாக்குகின்றது.

உகல எண்ணக்கருவுடன் இணைக்கப்பட்டு, நவீன தொழிநுட்பம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற பிரசைகளுக்கு, இந்த இணையதளத்தினை மிக துணையாக அமையும் என்பதை நான் நம்புகிறேன்.

குறித்த நோக்கத்துடன் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் தகவல்களை இற்றைப்படுத்தி மக்களுக்கு சேவையை வழங்க மேற்கொள்ளும் முனைப்பிற்கு மதிப்புளிக்கின்றேன்.

Top