கௌரவ இராஜாங்க அமைச்சர் அவர்களின் செய்தி

"நில உரிமை" அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதே அரசின் பொறுப்பாகவும் கடமையாகவும் விளங்குகின்றது. தீர்வு காணப்படாத மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு முறையானதாகவும் ஒழுங்காகவும் நிலத்தின் உரித்தினை அனைவருக்கும் பெற்றுக்கொடுப்பதே நடைமுறையிலுள்ள அரசின் பிரதான நோக்கமாக விளங்குகின்றது. அதன் பொருட்டு நடைமுறைபடுத்தும் வேலைத்திட்டத்திற்கு பங்களிப்பிற்கு கிடைத்தமையிட்டு பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.

நிலைபேறான அபிவிருத்திற்காக மட்டுப்படுத்தப்பட்ட நில வளத்தினை முகாமை செய்துக்கொண்டு எமது அமைச்சின் செயற்பணியாக காணப்படும் "காணியின் சிக்கலற்ற உரித்தையும் உச்ச பயன்பாட்டையும் சகலருக்கும் பெற்றுக் கொடுத்து, அனைத்து தரப்பினர்கள் சார்பிலும் நில வளத்தினை வினைத்திறன் மிக்கவாறு முகாமை செய்து நிலைபேறான அபிவிருத்திக்குப் பங்களிப்பு செய்வதே " எனது எதிர்பார்ப்பாகும்.

Top