சுற்றுலா மற்றும் நில அமைச்சகம் (நிலங்கள் பிரிவு) பற்றி.

இலங்கையின் காணிகளை முகாமை செய்வதற்காக அப்போதைய அரசாங்கத்தினால் சுற்றுலா மற்றும் நில அமைச்சகம் (நிலங்கள் பிரிவு) 1932 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டுள்ளது. காணி கொள்கைகளை வகுத்தல், அமுல் செய்தல், அரசாங்க காணிகளை பேணிவருதல், காணி உரித்தினை நிர்ணயம் செய்தல், காணி சுவீகரிப்பு மற்றும் போது தேவைப்பாடுகளுக்கு காணிகளை விடுவித்தல் என்பவை தொடர்பாக நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தல் அமைச்சின் குறிக்கோளாகும்.

நிலைபேறான அபிவிருத்திற்காக காணிகளை சிறந்த முறையில் பயன்படுத்துவதே காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் நோக்கமாகும்.
தற்பொது சூழலின் சமத்துவத்தினை பேணிச் செல்வதுடன் நில வளம் சிறந்த முறையில் விளைத்திறன்மிக்கதாகவும் வினைத்திறன்மிக்கதாகவும் முகாமை செய்வதும் நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்திற்கு பங்களிப்பு செய்வதும் அமைச்சின் குறிக்கோளாகும்.

காணி மற்றும் காணி அபிவிருத்தின் அமைச்சின் கீழ் நில அளவைத் திணைக்களம், காணி உரித்து நிர்ணயத் திணைக்களம், காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம், நில அளவைகள் மற்றும் வரைபடமாக்கல் நிறுவனம், காணி அளவைச் சபை, காணி பயன்பாட்டு கொள்கைத் திட்டமிடல் திணைக்களம், காணி சீர்திருத்த ஆணைக்குழு என்பவற்றை இயங்குகின்றது.

காணி அலகு, காணி எடுத்தல் அலகு, அபிவிருத்தி அலகு, கொள்கை அலகு, நிர்வாக அலகு, கணக்கு அலகு, உள்ளக கணக்காய்வு அலகு, திட்டமிடல் அலகு மற்றும் காணி எடுத்தல் மீளாய்வுச் சபை என்பன அலகுகளின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளின் மூலம் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு செயற்படுகின்றது

Top