செயலாளரின் செய்தி

எமது நாட்டில் காணப்படும் நிலத்தினை மனித, உயிரினம் என்பவற்றின் தேவைக்காக சிறந்த முறையில் பயன்படுத்துவதே எமது அமைச்சின் கொள்கையாகும். இதனூடாக நாட்டில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மிக நல்லதொரு வாழ்க்கையை கட்டியெழுப்பும் பொருட்டு வாய்ப்பு உருவாக்குவது இதன் குறிக்கோளாகும்.

"சுபீட்சத்தின் எதிர்காலம்" எனும் தலைப்பினை நோக்காகக் கொண்டு நில வளத்தினை சிறந்த முறையில் முகாமை செய்வதே எமது அமைச்சின் செயற்பணியாகும்.

இந்த நோக்கத்தினை நிறைவேற்றுவதற்காக அமைச்சும் அதன் கீழ் இயங்குகின்ற நிறுவனங்களின் மனித வளம், பௌதீக வளம், தொழிநுட்பம் மற்றும் அறிவை சிறந்த முறையில் கையாளுவது எங்களுக்குரிய பொறுப்பாகும். மக்களுக்கு நல்க வேண்டிய பணி மிக இலகுவான வகையில் தாமதமின்றி நிறைவேற்றுவதற்கு ஒழுங்கு செய்தலும் முறைகளை தயாரிப்பதும் காலத்தின் தேவையாகும். அதன் பொருட்டு நவீன தொழிநுட்பம் பயன்படுத்த வேண்டும்.

எமது நாட்டில் மேற்கொள்ளும் அனைத்து மனித அபிவிருத்தி செயற்பாட்டுடனும் தொடர்புடைய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அடிப்படையானது நிலவளமாகும். நாட்டின் நிலைபேறான அபிவிருத்திற்காக நில வளத்தினை விளைத்திறன் மிக்கவாறு நிலைபேறான அபிவிருத்திற்கு வழிவகுத்து சுபீட்சம் நிறைந்த இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியினை குறிக்கோளாகக் கொண்டு எமது அமைச்சின் எப்போதும் இற்றைப்படுத்தப்படுகின்ற தகவல்களை நவீன தொழிநுட்பத்தினை பயன்படுத்தி இலங்கையர்களுக்கு வழங்குவதற்கு இவ் இணையதளமானது துணையாக நிற்கும் என்பதை நான் நம்புகிறேன்.

 

ஆர். ஏ. ஏ. கே. ரணவக்க
செயலாளர்
காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு

Top